மனிதர்கள் ஊதியத்திற்காக செய்யும் தொழில்களில் மிகமிக இழிவானது மனிதர்கள் கழிக்கும் மலத்தை வெறும் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு துப்புரவு செய்யும் தொழில்தான். இந்தக் கொடுமை சனாத னத்தின் விளைவான சாதியை அடிப்படையாகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சாதியை அடிப் படையாகக் கொண்ட இந்தியாவில், இன்றும் கூட சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட பல இலட்சம் மனிதர்கள் இந்த இழிதொழிலைச் செய்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தத் தொழிலை செய்துதான், தாங்கள் பிழைக்க முடியும்