CALL US NOW 0452-2337968
January 1, 1970 at 12:00 am

You inspired me!

Hello, my name is Flora, and I am from K. Pudur, Madurai. I completed postgraduate studies in Social Work from Madurai Institute of Social Sciences. I am working as a trainer for the Dalit Women’s Federation at the IDEAS Centre. My main task is coordinating Dalit women’s holistic development in four districts.
On 27 July 2024, IDEAS organized St. Ignatius feast for staff and collaborators. It was not merely a religious event. The occasion was used for meaningful interaction among the staff and collaborators. Initially, the staff of IDEAS shared their work. Following this, some leaders of movements, CSOs and advocates shared ‘What IDEAS means to them”. Though IDEAS gave me an orientation about its mission, this event provided me with an opportunity to hear personal testimonies of leaders who have benefited from IDEAS. I was very impressed by their sharing.
One of the participants, Adv. Robert Chandra Kumar said, “The training I took at IDEAS during my college days transformed me and helped me to gain recognition and respect in society and my profession as a lawyer. I have been bringing my son to IDEAS from his childhood to sow the seeds of social responsibility. IDEAS is part of my family”. The leader of Sakthi Vidiyal NGO shared how various trainings offered by IDEAS have helped his staff to learn and train youth at the grassroots level. The participants were moved by various sharing.
This event gave me a deeper understanding of IDEAS and how it has brought quality changes in the lives of many. To know that IDEAS has produced many such social activists made me feel proud and I felt happy to be part of the mission of IDEAS. I am grateful to IDEAS for working for the upliftment of grassroots people and developing them into vibrant leaders. I am determined to continuously improve my work and fulfill my responsibilities with excellence.
 Flora, DWF Trainer
வணக்கம் எனது பெயர் புளோரா, நான் மதுரை மாவட்டம், புதூரிலிருந்து வருகிறேன். மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் சமூக பணியில் முதுகலை பட்டம் பெற்றேன். தற்போது, அய்டியாஸ் மையத்தில் தலித் பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறேன். நான்கு மாவட்டங்களில் உள்ள தலித் பெண்களின் மேம்பாட்டிற்கு  தேவையான பயிற்சிகளை ஒருங்கிணைப்பது எனது முக்கியப்பணியாகும். ஜூலை 27, 2024 அன்று, அய்டியாஸ் மையத்தில், புனித இஞஞாசியார் பிறப்பு விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவானது, சபை சார்ந்த கொண்டாட்டமாக மட்டுமில்லாமல்,   அய்டியாஸ் மைய பணியாளர்கள் மற்றும் உடன்பயணிப்போர் அய்டியாஸ் மையத்துடனான உள்ளார்ந்த பகிர்தலுக்கு வழிவகுத்தது .முதலில்  அய்டியாஸ் மைய பணியாளர்கள் தங்களது பணியை பற்றி பகிர்ந்து கொண்டனர், அதனை தொடர்ந்து, சில இயக்க தலைவர்கள் மற்றும் குடிமை சமூக தலைவர்கள்  அய்டியாஸ் மையத்துடனான தங்களது உறவினைப் பற்றி பகிர்ந்துகொண்டனர்.  அய்டியாஸ் மையத்தின் பணிகள் குறித்து நான் அறிந்திருந்தாலும்,  அய்டியாஸ்  மையத்தால் பயன்பெற்ற தலைவர்களின் தனிப்பட்ட சாட்சியங்களை கேட்க இந்நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஓவ்வொருவரின் பகிர்வால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இவ்விழாவில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான, வழக்கறிஞர் இராபர்ட் சந்திரா குமார் ,  ” எனது கல்லூரி பருவத்தில் அய்டியாஸ் மையத்தில் பெற்ற பயிற்சியே நான் இன்று சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மதிப்பு மிக்க சிறந்த வழக்கறிஞராக மாறுவதற்கு காரணம். எனது மகனின் மனதிலும் சமுதாய பொறுப்பிற்கான விதையை விதைக்க வேண்டுமென அவனையும்  அய்டியாஸ் மையத்திற்கு அழைத்து வருகிறேன்.  அய்டியாஸ் மையம் எனது குடும்பத்தின் ஒரு அங்கம்” என்று கூறினார். மேலும் சக்தி விடியல் என்னும் அரசு சாரா நிறுவனத்தின் பணியாளர், “அய்டியாஸ் மையமே எங்களது  பணியாளர்களுக்கு இளைஞர்களை எவ்வாறு ஊக்குவிப்பது மற்றும் மேம்படுத்துவது என்று  கற்று கொடுத்தது” என்று கூறினார். இதனை தொடர்ந்து, பங்கேற்றவர்களுள் சிலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வானது,  அய்டியாஸ்  மையம் எவ்வாறு சமுதாயத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியது என்ற ஆழமான புரிதலை ஏற்படுத்தியது. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் சிறந்த தீர்வாக அய்டியாஸ் மையம் இருந்ததைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். இதே போல் நானும் சிறந்த தலைவியாக மாற வேண்டும் என்ற புதுவித ஆர்வமும் என்னுள் பிறந்தது. அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்து அவர்களை சிறந்த தலைவர்களாக வளர்த்தெடுத்த அய்டியாஸ் மையத்தில் எனது முதல் பணியை தொடங்கியுள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். தொடர்ந்து எனது பணியை மேம்படுத்தவும், எனது பொறுப்புகளை சிறப்புற நிறைவேற்றவும் முடிவு செய்தேன்.
– புளோரா, தலித் பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam



undefined