CALL US NOW 0452-2337968
January 1, 1970 at 12:00 am

We are leaders of our communities!

“I am Ms. Muniswari, residing at Kannarapatti colony, Viruthunagar district. I was working as a nurse. I was interested in social work but did not know how to go about it. During the Covid-19 pandemic IDEAS Centre, Madurai reached out to us with material support. Slowly, I learnt about the Tamil Nadu Dalit Women Federation, floated by IDEAS. I took an interest in this platform and joined this federation. When I joined, I was only a silent spectator as I did not know how to speak in front of others or in public. When I was motivated to meet government officials to submit petitions about village needs, I was scared. I wanted to withdraw. However, other women motivated me to attend various training sessions organized by the federation. These training sessions gave me knowledge and confidence. I was pleasantly surprised to see how other women expressed themselves and took the courage to address various needs of the community by meeting government officials of the Blocks and Districts. Their sharing of experiences gave me a lot of confidence.

I started speaking in public. I wrote petitions to various officials. I felt shy initially to meet with officials. Slowly my confidence level increased. Today, I can speak in public, meet government officials demand what is due to us and raise questions when women are subjected to violence. I would attribute my growth to the Dalit Women Federation and IDEAS.”

A similar experience was shared by Ms. Mariammal, Tirunelveli district. She has been involved in social work since 2000. She joined the Dalit Women Federation about 8 months ago. Now she is a district leader. She said that various training sessions, especially monthly meetings helped her to grow in confidence and in organizing women in villages. She has grown in leadership qualities and articulation of problems faced by women. She can meet government officials and demand their interventions in dealing with issues that affect women. “Muniswari and Mariammal have emerged as community women leaders”, says Ms. Veerammal.

Ms. Veerammal, Coordinator, DWF

நாங்கள் எங்கள் சமூகத்தின் தலைவர்கள்!
எனது பெயர் முனீஸ்வரி. விருதுநகர் மாவட்டம் கன்னாரப்பட்டி காலனியில் வசித்து வருகிறேன். நான் செவிலியராக வேலை செய்து கொண்டிருந்தேன். எனக்கு சமூகப்பணி செய்வது மிகவும் பிடிக்கும். ஆனால் எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தேன். கொரோனா காலத்தில் அய்டியாஸ் மையம் எங்கள் கிராமத்திலுள்ள பெண்களுக்கு பொருளுதவி செய்தார்கள். அப்போது தான் தமிழ்நாடு தலித் பெண்கள் கூட்டமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன். நானும் இணைந்து பணி செய்ய விருப்பம் தெரிவித்து கூட்டமைப்பில் சேர்ந்தேன்.
கூட்டமைப்பில் சேர்ந்த பொழுது பிறர் முன்னிலையிலும், பொது தளத்தில் பேசத் தெரியாமல் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தேன். கிராமத்தின் அடிப்படை தேவைகளுக்காக அரசாங்க அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பது எப்படி என்பதுகூட தெரியாமல் இருந்தேன். இந்த நிலையில்தான், கூட்டமைப்பு ஏற்பாடு செய்யும் பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்குமாறு என்னை பிற பெண்கள் ஊக்கப்படுத்தினார்கள். அந்த பயிற்சிகள் எனக்கு பொது அறிவையும் நம்பிக்கையும் கொடுத்தன. கூட்டமைப்பிலுள்ள மற்ற பெண்கள் சமூகத்திலுள்ள பல்வேறு அடிப்படை தேவைகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அரசு அதிகாரிகளை அணுகுவதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவர்களின் அனுபவப் பகிர்வு எனக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது.
நான் பொதுவெளியில தைரியமாக பேசத் தொடங்கினேன். பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அரசு அதிகாரிகளை சந்திப்பதற்கு பயமாக, கூச்சமாக இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வந்தது. இன்று நான் தைரியமாக பொதுவெளியில் பேசுகிறேன். பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும்போது அதிகாரிகளை சந்தித்து, அவர்களுக்குரியவற்றை பெற்றுக் கொடுக்க என்னால் முடிகிறது. எனது இந்த வளர்ச்சிக்கு தலித் பெண்கள் கூட்டமைப்பு தான் காரணம் என்று கூறுவேன்.
– முனீஸ்வரி
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாரியம்மாள் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்தார். இவர் 2000-ஆம் ஆண்டு முதல் சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார். எட்டு மாத காலத்திற்கு முன்பு தமிழ்நாடு தலித் பெண்கள் கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொண்;டார். இப்போது இவர் திருநெல்வேலி மாவட்ட கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறார். கூட்டமைப்பில் வழங்கப்பட்ட பல்வேறு பயிற்சிகள் மற்றும் மாதக் கூட்டங்கள் போன்றவை கிராமப் பெண்களை ஒருங்கிணைப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பதாக கூறினார். தலைமை பண்பிலும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதிலும் வளர்ந்துள்ளதாக தெரிவித்தார். பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு அதிகாரிகளை சந்தித்து பிரச்சனைகளை தீர்ப்பதில் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகிறார். முனீஸ்வரியும், மாரியம்மாளும் பெண்களிடையே நல்ல தலைவர்களாக உருவாகி வருவதாக திருமிகு வீரம்மாள் தெரிவித்தார்.
வீரம்மாள், ஒருங்கிணைப்பாளர், ததபெகூ

 

SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam