CALL US NOW 0452-2337968
January 1, 1970 at 12:00 am

Three changes within me

My name is Benny, and I am studying for my B.Sc Mathematics in my second year at St. Joseph’s College Trichy. As a representative of the ‘All India Catholic University Federation’ (AICUF), I participated in the Social Analysis workshop organised by IDEAS, Madurai. This was my first exposure to a five-day training session on social concerns. There were 30 participants.

At the end of the programme, I felt some changes within me. Usually, I am an easy-going person. I do not bother about anything. This course affected me. I would like to share with you three concrete changes within me.

Usually, I used to glance through newspapers or magazines without any deeper understanding. Now I have learnt to read between the lines and the politics behind such news items. Secondly, like my friends and colleagues, I begin my day by watching social media reels and shots and also end the day in the same manner. Sometimes I spend a lot of time watching social media at night. This course helped me to understand the positive usage and ill-effects of social media. Thirdly, I go to my college by bus. On the way I used to buy tinned soft drinks and snacks. After consuming, I just threw them from the bus. I used to enjoy throwing these. I never thought about the person who will be cleaning or the damage I cause to the environment. Now I have learnt the importance of caring for the nature and my responsibility towards the future generation since this mother nature belongs to many generations that would follow me.

I have decided to share my learning with my friends and colleagues and inspire a couple of students. The methodology of the training was interesting. It began with an experiential and personal sharing of women and men. I was asked to reflect on these experiences and read related books. I came up with several questions. Then I was allowed to raise those questions with some experts. Instead of experts sharing what they wanted to share, they listened to my questions and organised their sharing in a more meaningful manner. I liked this methodology very much. Thank you AICUF, for offering me this opportunity and IDEAS for initiating a new thinking within me.

Benny, AICUF, St. Joseph’s College

என் பெயர் பென்னி, நான் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். அகில இந்திய கத்தோலிக்கப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பின் (AICUF) பிரதிநிதியாக, மதுரை ஐடியாஸ் மையம் நடத்திய சமூகப் பகுப்பாய்வுப் பயிலரங்கில் பங்கேற்றேன். இந்த ஐந்து நாள் பயிற்சி தான் என்னுடைய சமூகம் சார்ந்த எனது முதல் பயிற்சியாகும். இப்பயிற்சியில் 30 பேர் பங்கேற்றனர்.
இப்பயிற்சியின் முடிவில் எனக்குள் சில மாற்றங்களை உணர்ந்தேன். பொதுவாக, நான் எதையும் எளிதில் கடந்து செல்லும் நபர். நான் எதைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. ஆனால் இந்தப் பயிற்சி என்னை மிகவும் பாதித்தது. அதனால் என்னுள் ஏற்பட்ட மூன்று உறுதியான மாற்றங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பொதுவாக, நான் செய்தித்தாள்கள் அல்லது பத்திரிகைகளை படிக்கும் போது ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் மேலோட்டமாக படிப்பேன். ஆனால் இப்போது நான் செய்திகளை படிக்கும்போது ஒவ்வொரு செய்திக்கு பின்னால் உள்ள அரசியலையும் பகுத்துப் பார்க்க கற்றுக் கொண்டேன். இரண்டாவதாக, எனது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை போலவே நானும் சமூக ஊடக ரீல்கள் மற்றும் காட்சிகளை பார்த்து தான் எனது நாளை தொடங்குவேன். அதே முறையில் தான் ஒவ்வொரு நாளையும் முடிப்பேன். சில நாட்கள் இரவு நேரங்களில் சமூக ஊடகங்களில் அதிகமான நேரத்தை செலவிடுவேன். சமூக ஊடகங்களிலுள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை பயன்பாடுகளை பற்றி புரிந்து கொள்ள இந்தப் பயிற்சி எனக்கு உதவியது. மூன்றாவதாக, நான் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வேன். போகும் வழியில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு, அதை அப்படியே பேருந்தில் இருந்தவாறே சாலையில்/தெருவோரத்தில் தூக்கி எறிவேன். அந்த குப்பைகளை சுத்தம் செய்யும் நபரைப் பற்றியோ அல்லது சுற்றுச்சூழலுக்கு நான் ஏற்படுத்தும் கேடுகளைப் பற்றியோ நான் ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் இந்தப்பயிற்சி மூலம் இயற்கையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். இந்த இயற்கை எனக்கு பின்னால் வரும் பல தலைமுறைகளுக்கு சொந்தமானது என்பதால், வருங்கால தலைமுறையினர் மீதான எனது பொறுப்பை உணர்ந்தேன்.
நான் கற்றுக் கொண்டவைகளை எனது நண்பர்கள் மற்றும் நான் வாழும் பகுதியிலுள்ளவர்களுக்கு தெரிவிக்கவும், ஓரிரு மாணவர்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வு கொடுக்கவும் முடிவு செய்துள்ளேன். பயிற்சியை அமைத்த முறை மிகவும் சிறப்பானதாக இருந்தது. பயிற்சியின் முதல் நாள் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்களின் அனுபவப் பகிர்வுடன் தொடங்கியது. இந்த அனுபவப் பகிர்வைப் பற்றி சிந்திக்கவும், தொடர்புடைய புத்தகங்களைப் படிக்கும் வகையில் அடுத்த அமர்வுகள் இருந்தது. இதன் மூலம் எனக்கு பல கேள்விகள் எழுந்தன. பின்னர் அந்த கேள்விகளை சில சிறப்பான கருத்துரையாளர்களிடம் எழுப்ப எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கருத்துரையாளர்கள் தங்கள் கருத்துக்களை மட்டும் பகிராமல், எனது கேள்விகளுக்கான பதிலை தந்து ஒவ்வொரு கருத்துகளிலும் நான் ஆழமான தெளிவு பெறும் வகையில் பயிற்சி அமைந்திருந்தது. இந்த முறையில் பயிற்சியை அமைத்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பை தந்த அய்க்கப் அமைப்புக்கும், எனக்கு ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்திய ஐடியாஸ் மையத்திற்கும் எனது நன்றி.
பென்னி, அய்க்கப்
செயின்ட் ஜோசப் கல்லூரி
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam