I am Selvi. For the past 10 years, I have been working as a manual scavenger in Balakrishnapuram Panchayat, Dindigul District. The Madurai Legal Awareness Coordination Committee (MLACC) organised a training session at the Block Development Office (BDO). My colleagues and I participated. The members explained about the different schemes offered to women engaged in manual scavenging work by the TAHDCO, if the women organise themselves as a group.
We, 11 women, decided to form a group and opened a new account in the bank in the name of the group. Then, with the guidance of MLACC, we approached the TAHDCO for a loan. We were given Rs 11,00,000 for each one, Rs 1,00,000, with 50% subsidy.
Murugeswari and I bought sewing machines. We stitch clothes after our scavenging work and make some money. Sirkali bought 5 goats and is rearing them. Janaki paid all debts and is now free from the clutches of the moneylenders who charged exorbitant interest. Now she has to repay only the TAHDCO loan. Another woman, Velammal, completed her unfinished housing.
Many of us in our group are now engaged in small businesses. This loan has helped us to improve our income level. We are grateful to MLACC.
Selvi, Manual Scavenger, Balakrishnapuram Panchayat, Dindigul
எனது பெயர் செல்வி. நான் திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்தில் தூய்மை காவலராக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பாக டீனுழு அலுவலகத்தில் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். நானும், என்னுடன் வேலை செய்கிறவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோம். தொழிலாளர்களுக்கு எந்த மாதிரியான கடன் திட்டங்கள் உள்ளது என்பதை பற்றியும் விளக்கமாக எடுத்து கூறினார்கள்.
கூட்டம் முடிந்த பிறகு எங்கள் பஞ்சாயத்துல வேலை செய்கிற துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் 11 பேர் இணைந்து ஒரு குழுவாக பதிவு செய்து, தாட்கோ கடன் பெறுவதற்கு மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு எங்களுக்கு வழிகாட்டினர். நாங்க ஆன்லைன் வழியாக பதிவு செய்தோம். பிறகு நேர்காணல் நடந்தது. நாங்கள் 11 பேரும் ஒன்றாக சேர்ந்து கடன் உதவியை பெற தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றதால் எங்கள் குழுவிற்கு 11 லட்சம் கடன் 50% மானியத்துடன் கிடைத்தது.
இந்த கடன் தொகையை வைத்து நானும் முருகேஸ்வரி என்பவரும் தையல் இயந்திரம் வாங்கி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றோம். வேலைக்கு சென்று வந்த பிறகு துணிகளை தைத்து கொடுக்கிறோம். என்னுடன் கடன் வாங்கிய நபர்களில் சீர்காழி என்பவர் ஐந்து ஆடுகள் வாங்கி வளர்த்து வருகிறார். ஆடுகளை பராமரிப்பது, ஆடுகளுக்கான தீவனங்கள் மற்றும் மேய்ச்சலுக்கு கூட்டி செல்கிறார். ஜானகி என்பவர் வெளியில் உதிரியாக வாங்கிய கடன்களை முற்றிலும் அடைத்துவிட்டு தற்போது தாட்கோ கடனை மட்டும் திருப்பி செலுத்து வருகிறார். இதனால் குழு கடன், அதிக வட்டி போன்றவற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார். மற்றொரு நபரான வேலம்மாள் என்பவர் தான் பெற்ற கடனைக் கொண்டு அவரது வீடு பாதிக்கட்டியும் கட்டாமலும் இருந்ததை சீரமைத்து முழுமையாக கட்டி முடிப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்.
இப்போது எங்கள் குழுவில் ஒவ்வொருவரும் சிறு சிறு சுயதொழில் செய்கிறோம். நல்ல வருமானம் கிடைக்கிறது. பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். எங்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்த மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழுவிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
– செல்வி, தூய்மைப்பணியாளர், பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து, திண்டுக்கல்

Comments are closed.