I am Ramu. I have been working as a manual scavenger for the past 25 years in Veppankulam Panchayat in Viruthunagar District. The officials always will order and force me to do all sorts of menial jobs. I was introduced to the Manual Scavengers Rights Sangam. The Sangam conducted various training sessions for us. We were told what type of work we had to do and what work we need not do. I started asserting myself and refused to do some work.
I retired from my work during the Pandemic. I was not given the retirement benefit of Rs 50,000. I complained to the leaders of the Sangam and with their help I received the amount. I am entitled to a pension of Rs 2,000 per month. The officials were angry with me and refused to process my application. Again, I went to the leaders of the Sangam. They helped me to send petitions to the District Collector and other officials. A few months ago, I started getting my monthly pension.
I am grateful to the leaders of the Sangam for helping me to live a dignified life and for helping me to receive due monetary benefits from the government.
நான் ராமு. விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி ஒன்றியம், T. வேப்பங்குளம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக 25 வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தேன். நான் வேலை செய்யும் போது மலம் அள்ளுவது, சாக்கடை சுத்தம் செய்வது போன்ற பல வேலைகளை அதிகார தோணியுடன் செய்ய சொல்வார்கள். மரியாதையும் கொடுக்க மாட்டார்கள்.
இந்த நேரத்தில் தான் நான் துப்புரவு பணியாளர்கள் உரிமைச் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து, மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்யும் பல கூட்டங்களுக்கு சென்றேன். அவ்வாறு கூட்டங்களுக்கு செல்லும்போது துப்புரவு பணியாளர்களாகிய நாம் எவ்வகையான வேலைகளை செய்ய வேண்டும். எந்த வேலைகளை செய்யக்கூடாது போன்ற பல விசயங்களை தெரிந்து கொண்டேன். அதன் பின்பு ஊராட்சி அலுவலர்கள் எனக்கு வேலை கொடுக்கும் போது இந்த வேலைகள் மட்டும் தான் செய்வேன் என்று சொல்லும் அளவிற்கு தைரியம் வந்தது.
கொரோனா காலத்திற்கு பின்பு நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் எனக்கு கிடைக்க வேண்டிய பணி ஓய்வு தொகை ரூ. 50,000 கிடைக்கவில்லை. நான் சங்கத்திற்கு சென்று முறையிட்டேன். சங்க பொறுப்பாளர்களும் நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஓய்வூதிய தொகையை வாங்கி கொடுத்தார்கள்.
பிறகு எனக்கு வர வேண்டிய மாத ஓய்வூதியம் ரூ. 2,000, இரண்டு வருடங்களாக கிடைக்கவில்லை. மறுபடியும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழுவிடம் போய் கூறினேன். அவர்கள் மாவட்ட ஆட்சியர், BDO போன்றோருக்கு மனு கொடுத்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அந்த தொகையையும் வாங்கி கொடுத்து விட்டார்கள். இப்போது எனக்கு மாதம் மாதம் ரூ. 2,000 ஓய்வூதியத் தொகை வருகிறது.
என் வாழ்வில் மாண்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், எனக்கு கிடைக்க வேண்டிய பணி பலன்களையும் பெற்றுத் தந்த மதுரை சட்ட விழிப்புணர்வு குழு மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உரிமை சங்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Comments are closed.