CALL US NOW 0452-2337968
January 1, 1970 at 12:00 am

No more fear of delivering a talk!

I am Suriya, working as a field staff of Adi Tamizhar Democratic Welfare Workers’ Association. I have been organising training sessions, consultations, and public meetings for the association. I prepare my talks well. However, whenever I had to speak, I was trembling. My legs and hands used to shiver. I forgot what I had prepared. I felt so bad that I could not deliver a good talk despite spending time preparing.

I asked my friends how I can get rid of fear and trembling. Some of them suggested that I attend the workshop on Public Speaking conducted by IDEAS every year. I was looking for this opportunity for several months. During the monthly meeting in July, our project director told us that from August 13-17, 2025, IDEAS will be conducting a Public Speaking workshop, and he asked us who would like to participate. I felt so happy and volunteered immediately.

I took all the sessions seriously. Simply and creatively, with practical sessions, we were taught the art of public speaking. I found every session was interesting. We were also introduced to the library and motivated to read books. The session on how to read fast and take notes was enlightening. I never thought of reading books. But during the workshop, I read and took notes.

On the last day of the workshop, 44 of us were divided into groups and asked to speak on a particular theme. My group members wanted to have a demonstration against Honour Killing and speak on this issue. They asked me to speak on why we need a law to stop honour killing. I agreed and spoke well. Everyone appreciated my boldness, clarity of thought and delivery. After this training, I have gained confidence. Now, I feel that I can speak among women with whom I am working without fear and anxiety.  Thank you, IDEAS, for training me to be a good orator.

Mrs. Suriya, Field Staff

Adi Tamizhar Democratic Welfare Workers’ Association

நான் சூர்யா, ஆதித்தமிழர் ஜனநாயகத் தொழிலாளர் பொது நலச்சங்கத்தின் களப்பணியாளராகப் பணிபுரிகிறேன். சங்கத்திற்காக பயிற்சி அமர்வுகள், ஆலோசனை மற்றும் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறேன். நான் கூட்டங்களில் பேசுவதற்கு முன் எனது பேச்சுக்கான முன்தயாரிப்பு செய்து கொண்டு போவேன். இருப்பினும் நான் பேசும் போது மிகவும் பயமாக இருக்கும். என் கை கால்களும் நடுங்கும். நான் தயாரித்த அனைத்தும் மறந்துவிடும். எவ்வளவுதான் முன்தயாரிப்பு செய்து கொண்டு சென்றாலும் ஒரு நல்ல உரையை வழங்கமுடியாத அளவுக்கு நான் மிகவும் மோசமான நிலையில் இருந்தேன்.
பயத்தையும் நடுக்கத்தையும் எப்படி அகற்றுவது என்று என் நண்பர்களிடம் கேட்டேன். அவர்களில் சிலர், ஒவ்வொரு ஆண்டும் ஐடியாஸ் நடத்தும் மேடை பேச்சாற்றல் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். இந்த வாய்ப்பை நான் பல மாதங்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தேன். ஜூலை மாதம் நடந்த சங்கத்திற்கான மாதாந்திரக் கூட்டத்தின் போது, ​​எங்கள் திட்ட இயக்குநர், ஆகஸ்ட் 13-17, 2025 வரை, ஐடியாஸ் மையத்தில் மேடை பேச்சாற்றல்  பயிற்சி நடைபெறுகிறது என்று கூறினார், மேலும் அவர் யாரேனும பங்கேற்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன், உடனடியாக நானே முன்வந்து பயிற்சியில் பங்கேற்க விரும்புவதாக கூறினேன்.
பயிற்சியின் போது அனைத்து அமர்வுகளிலும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றேன். எளிமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும், நடைமுறை அமர்வுகளுடன் இப்பயிற்சி இருந்தது. ஒவ்வொரு அமர்வும் சுவாரஸ்யமாக இருப்பதைக் கண்டேன். நூலகத்தைப் பற்றிய அறிமுகமானது புத்தகங்களை எடுத்து படிக்கத் தூண்டுதலாக அமைந்தது.  வேகமாகப் படிப்பது மற்றும் குறிப்புகள் எடுப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. எனக்கு புத்தகங்கள் படிக்கும் எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை.  ஆனால் இந்த பயிற்சியின் போது, நான் புத்தகங்களை படித்து குறிப்பு எடுப்பதை பழகி கொண்டேன்.
பயிற்சியின் கடைசி நாளில், பயிற்சியில் பங்கேற்ற 44 பேரும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவினரையும் ஒரு தலைப்பில் பேசச் சொன்னார்கள். எனது குழு உறுப்பினர்கள் ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி, இந்தப் பிரச்சனை குறித்துப் பேச விரும்பினர். ஆணவக் கொலைகளைத் தடுக்க நமக்கு ஏன் ஒரு சட்டம் தேவை என்பதை பற்றி என்னை பேசச் சொன்னார்கள். நானும் அதை ஏற்று கொண்டு நன்றாக பேசினேன். எனது துணிச்சல், சிந்தனைத் தெளிவு மற்றும் பேச்சை அனைவரும் பாராட்டினர் இப்போது, நான் பணிபுரியும் பெண்களிடையே பயம் மற்றும் தடுமாற்றம் இல்லாமல் என்னால் பேச முடியும் என்ற நம்பிக்கை இப்பயிற்சியின் மூலம் வந்துள்ளது. ஒரு நல்ல பேச்சாளராக மாற எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த அய்டியாஸ் மையத்திற்கு நன்றி கூறுகிறேன்.
திருமதி. சூரியா, களப் பணியாளர்கள், ஆதி தமிழர் ஜனநாயக நலப் பணியாளர் சங்கம்
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam