CALL US NOW 0452-2337968
January 1, 1970 at 12:00 am

My Library has 1000 books!

IDEAS, a Jesuit-run social centre, located in Madurai, stands as a distinguished entity. This centre has been instrumental in forming several trainers, social activists, and movement leaders. I am proud to say that I am one among them. The primary reason is the series of structured training programmes conducted at regular intervals every year.

At the IDEAS Centre, trainees are exposed to the library facility, as an integral part of their learning process. During certain key training sessions, such as Writing skills, Public Speaking, Media Education, and Social Analysis, there is a session to introduce the library resources. The facilitators guide the trainees to browse through available books, reference materials, and archival documents. Consequently, many trainees develop a habit of exploring and utilizing the resources. Once I was introduced and I delved into the rare and valuable collections.

Once I picked up, “Dr. Babasaheb Ambedkar: Life and Mission”, authored by Dhananjay Keer. This book was written during Ambedkar’s lifetime and revised under his supervision. Spanning nearly 800 pages, it remains an invaluable resource. Many such significant works of social reformers are housed in this library. As someone engaged in writing about the lives of social reformers, I have found these books immensely handy and useful.

I am aware that several writers, movement leaders, and scholars frequently access this library. The collection here is rich in literature on social reform, and contains a vast range of relevant topics. Every year, new books are carefully reviewed, acquired, and documented.

This library plays a crucial role in inspiring young individuals stepping into the realm of social reform. It fosters a reading culture among them. Furthermore, during training sessions at IDEAS, books are distributed to trainees to encourage reading. Additionally, trainees are motivated to establish personal libraries in their homes.

Following this inspiration, I have set up my library at home, currently housing approximately 1,000 books!

Tamizh Selvan
Writer & Trainer, Sattur

தமிழக சேசு சபையினர் நடத்தும் சமூகப்பணி மையங்களில் மதுரையிலுள்ள அய்டியாஸ் மையம் தனித்தும் வாய்ந்தது. இம்மையத்தில் என்போன்ற எத்தனையோ பயிற்சியாளர்கள், சமூக மாற்றப் பணியாளர்கள், இயக்கத்தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் மூலகாரணம் அங்கு வருடந்தோறும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தொடச்சியாக நடத்தப்படும் பல்வேறு கட்டப் பயிற்சிகளாகும்.
இங்கு பயிற்சிக்கு வரும் நபர்கள், பெரும்பாலும் அங்குள்ள நூலகத்திற்குச் செல்வது வழக்கம். ஏனெனில் அந்த நூலகம் சிறப்பானது எனலாம். சில முக்கியப் பயிற்சிகளில் குறிப்பாக எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை, மேடைப் பேச்சாற்றல் மற்றும் தொடர்பியல் திறன்கள், ஊடகக் கல்வி, சமூகப் பகுப்பாய்வு உள்ளிட்ட பயிற்சிகளின் போது நூலகம் பார்வையிடல் என்ற ஓர் அமர்வு இருக்கும். அதற்காக அய்டியாஸ் மையத்திலிருக்கும் நூலகத்தைப் பார்வையிட பங்கேற்பாளர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அப்போது அந்நூலகத்தின் சிறப்புகள், அதில் இடம் பெற்றிருக்கும் நூற்பட்டியல் வகைகள், ஆவணக் காப்பகம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்வார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்கள் இங்குள்ள நூல்களை எடுத்துப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். அப்படித்தான் எனக்கும் பயிற்சியில் பங்கேற்றபோது நூலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்நூலகத்தின் இடம் பெற்றிருக்கும் அரிய நூல்களை தேடியெடுத்து வாசித்திருக்கிறேன்.
குறிப்பாக தனஞ்செய் கீர் எழுதிய “பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டு, அவரால் திருத்தம் செய்யப்பட்ட நூல். இந்நூல் தற்போது பதிப்பில் எங்கும் இல்லை. கிட்டதட்ட 800 பக்கங்களுக்கு மேல் இருக்கும். இதுபோன்ற நூல்கள் இந்நூலகத்தில் இருக்கின்றன. நான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு எழுதும் போது, பெரிதும் உதவியாக இந்நூல் இருந்தது. இதுபோன்ற சமூக மாற்றத்திற்கான தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நான் எழுதும்போது, அய்டியாஸ் மையத்தில் இடம் பெற்றிருக்கும் நூல்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
என்போன்ற எழுத்தாளர்கள். இயக்கத் தலைவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் எனப் பலரும் இந்நூலகத்தை பயன்படுத்தி வருவதை நான் அறிந்திருக்கிறேன். சமூக மாற்றத்திற்கான கருப்பொருளில் இங்கு ஏராளமான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு ஒவ்வொரு வருடமும் புதிதாக வந்திருக்கும் புத்தகங்களைத் தேடி அவற்றை வாங்கி ஆவணப்படுத்தியும் வருகின்றனர்.
புதிதாக சமூக மாற்றப் பணிகளில் கால் வைக்கும் பல இளைஞர்களை வாசிப்புக்குள் முடுக்கிவிடும் வேலையை செவ்வனே இந்நூலகம் செய்கிறது. அதோடு அய்டியாஸ் மையத்தில் நடைபெறும் பயிற்சியின் நிறைவில் புத்தகங்களை வழங்கி, அவற்றைப் படிக்க ஊக்குவிப்பதோடு, ஒவ்வொரு நபருக்கும் தனிநபர் நூலகம் ஒன்றை அவர்களின் வீட்டில் அமைக்கவும் தூண்டி வருகின்றன.
இப்படித்தான் நானும் எனது வீட்டில் இன்றைக்கு சுமார் 1,000 புத்தகங்களை கொண்ட நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறேன்.
மு. தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர்-பயிற்சியாளர், சாத்தூர்
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam