CALL US NOW 0452-2337968
January 1, 1970 at 12:00 am

I received my job placement order!

I am Ganesan from Viruthunagar district. My father works as a manual scavenger. Though I have completed under graduation there was no one to guide me in getting a decent job. I was going for construction work as a daily labourer. I was feeling helpless. In a social media post, I found that IDEAS was organizing a job placement camp at IDEAS, Madurai on 30 December 2023. I decided to participate.

When I arrived at IDEAS, I found several youths registering themselves for jobs. I was wondering whether I would get a chance. After verifying my certificates, I was interviewed by the placement officers. I was confident in answering their questions. On the same day, I received a job order. I felt so happy. I was telling myself that my dream was coming true and that my life would be different from now on. I informed my parents, and they encouraged me to take up the job and move on in life with a positive approach.

Ms. Indumathi from Madurai said, “It is good to see that IDEAS is organizing a job placement camp for youth, especially focusing on Arunthathiyar youth. This is my first experience and I learnt how candidates are interviewed by entrepreneurs. I feel such camps would instil confidence among the Arunththathiyar youth to give up the traditional job and explore new job opportunities.”

On 30 December, the Madurai Legal Awareness Coordination Committee and Don Bosco Vazhikati Centre, Trichy jointly organized a job placement camp at IDEAS, Madurai. From 6 companies, placement officers were present to recruit potential youth. About 118 youth participated and 13 received job placement orders.

Mr. Muniyandi
Training Coordinator

வேலைக்கான பணி ஆணையை பெற்றுக்கொண்டேன்!
நான் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன். எனது தந்தை கையால் மலம் அள்ளும் பணி செய்யும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். நான் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், எனக்கு ஒரு தகுதியான வேலை கிடைக்க வழிகாட்ட யாரும் இல்லை. தினக்கூலியாக கட்டிட வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். மேலும் ஒரு சமூக ஊடக வலைத்தளப் பதிவில் 30 டிசம்பர் 2023 அன்று மதுரை அய்டியாஸ் மையத்தில் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை கண்டேன். அதில்; பங்கேற்க முடிவு செய்தேன்.
நான் அய்டியாஸ் நிறுவனத்திற்கு வந்தபோது, பல இளைஞர்கள் வேலைக்காக தங்களைப் பதிவு செய்திருந்தார்கள். எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா? என்று யோசித்தேன். எனது சான்றிதழ்களை சரிபார்த்த பிறகு, வேலை வாய்ப்பு அலுவலர்கள் என்னை நேர்காணல் செய்தனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்ததில் ஒரு நம்பிக்கை பிறந்தது. அதே நாளில், எனக்கு வேலைக்கான உத்தரவும் கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். மேலும் என்னுடைய கனவு நனவாகும் என்றும் இனிமேல் என் வாழ்க்கை வேறுவிதமாக இருக்கும் என்பதையும் உணர்ந்தேன். இந்த தகவலை நான் என்னுடைய  பெற்றோருக்குத் தெரிவித்தேன், அவர்கள் என்னை ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன் வாழ்க்கையில் முன்னேறவும் என்னை ஊக்கப்படுத்தி .வேலைக்கு செல்ல அனுமதித்தனர்.
மதுரையைச் சேர்ந்த செல்வி. இந்துமதி கூறுகையில், ”அய்டியாஸ் நிறுவனம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை அருந்ததியர் இளைஞர்களுக்காக நடத்துவது மிகவும் சிறப்பு. இந்த முகாமில் பங்கேற்பது எனது முதல் அனுபவமாகும். இம்முகாமில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்கள் எவ்வாறு நேர்காணல் நடத்துவார்கள் என்பதை பற்றி நான் தெரிந்துகொண்டேன்;. இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதால் அருந்ததியர் இளைஞர்கள் தலைமுறை தலைமுறையாக செய்யும் தொழிலை விட்டுவிட்டு புதிய வேலை வாய்ப்புகளை தேடிச் செல்வார்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் ஏற்பட்டுள்ளதை உணர்கின்றேன்.
டிசம்பர் 30 அன்று, மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழுவும், திருச்சி டான் போஸ்கோ வழிகாட்டி மையமும் இணைந்து மதுரை அய்டியாஸ் மையத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. இம்முகாமில்; 118 இளைஞர்கள் கலந்து கொண்டனர். 6 தொழில் நிறுவனங்களில் 13 பேர் வேலைக்காக தேர்வாகியுள்ளது சிறப்பு.
திரு. முனியாண்டி பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam