January 1, 1970 at 12:00 am
I learned to create a quality website!
I am Nagamageswari, working as an office staff of Tamil Nadu Labour Rights Federation. My job is to prepare invitations, notices, banners, social media products and videos for various units of our organisation. Initially, I hesitated to participate in this workshop as I thought it would be a waste of time since I knew my job well.
The three-day workshop on social media techniques was an eye-opener. What I used to do in one hour, I could do it in 30 minutes. Moreover, the quality of the product is much better than what I used to produce. I learned new techniques and Apps.
There were also components of practical sessions and group learning. I benefited a lot from the practical sessions. Each one of us produced different media products, and at the end, we showcased these. I was under the impression that one has to learn coding to create a website. This myth is demolished. During the course, I created a website. I also learned how to use AI effectively and safely. I am confident now. I can prepare quality media products in a short duration. I will use my learning to give visibility to the work of my organisation. I will also teach my office colleagues what I have gained.
– Nagamageswari, TLRF
நான் நாகமகேஸ்வரி, தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பில் அலுவலக பணியாளராக பணி செய்து வருகிறேன். எங்கள் கூட்டமைப்பின் பல்வேறு பிரிவுகளுக்கான அழைப்பிதழ்கள், அறிக்கைகள், பதாகைகள், சமூக ஊடக தயாரிப்புகள், வீடியோக்கள் தயாரிப்பது போன்ற பல பணிகளை செய்து வருகிறேன். முதலில் இப்பயிற்சியில் பங்கேற்க தயங்கினேன். ஏனென்றால் நாம் தான் இந்த பணிகளை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோமே, எதற்காக நேரத்தை வீணாக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் இந்த மூன்று நாள் சமூக ஊடகப் பயிற்சியானது எனது பார்வையை மாற்றியது. நான் 1 மணி நேரம் செய்த வேலையை 30 நிமிடத்தில் என்னால் செய்ய முடிந்தது. அதுவும் என்னுடைய படைப்பை தரமானதாக உருவாக்க முடிந்தது. மேலும் பல புதிய தொழில்நுட்பங்களையும், செயலிகளையும் கற்றுக் கொண்டேன்.
இப்பயிற்சியில் செய்முறை மற்றும் குழு கற்றல் முறையில் அமர்வுகள் இருந்தன. செய்முறை அமர்வுகள் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. ஓவ்வொரு பங்கேற்பாளர்களும் வெவ்வேறு விதமான ஊடகத் தயாரிப்புகளை உருவாக்கினோம். அந்த உருவாக்கங்கள் கடைசி நாள் அமர்வில் காட்சிப்படுத்தப்பட்டது. ஒரு இணையதளத்தை உருவாக்க குறியீட்டு முறை (coding) கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி பயிற்சி நேரத்தில் நானும் ஒரு இணையதளத்தை உருவாக்கினேன். செயற்கை நுண்ணறிவவை (AI) எவ்வாறு திறம்பட மற்றும் பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதையும் கற்றுக் கொண்டேன். குறுகிய நேரத்தில் தரமான ஊடக தயாரிப்புகளை என்னால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நான் கற்று கொண்ட விஷயங்களை எனது அமைப்பின் பணிகளை வெளி கொணர்வதற்கு பயன்படுத்துவேன். மேலும் நான் இங்கு கற்று கொண்டதை எனது அலுவலக உடன் பணியாளர்களுக்கும் கற்று கொடுப்பேன்.
– நாகமகேஸ்வரி, TLRF
Comments are closed.