IDEAS was founded in 1984. To create a green ambience the founders planted about 45 coconut trees in the IDEAS premises. Until now, apart from giving shade, protecting from dust and providing green cover, the trees yield tasty coconuts. Every day, our staff collects the falling coconuts, as it is difficult to find people to climb the trees and cut them. The collected coconuts are used for cooking. The coconut leaves are used as firewood for cooking rice. At times, the dried coconuts are sent to produce coconut oil. Every part of the tree is useful. One can say that IDEAS coconuts have nourished all trainees who have been part of our various workshops.
As these trees are growing old, it was decided to plant new coconut trees. About 48 new saplings, 38 normal country varieties and 10 high-yield varieties are recently planted, adjacent to the old trees. After about 5 years, when the new trees start yielding fruits the old trees could be cut off and can be used for firewood. There will be continuous flow of coconuts, green cover and protection from dust.
Mr. Kebi, one of our support staff, said, “We enjoyed the coconuts planted by our support staff in the 80s. Now, we are planning new ones. I am not sure whether I will be in IDEAS to enjoy the fruits. But I am sure the future trainees will remember us gratefully. Moreover, I like IDEAS because of the green atmosphere. We all want to care for Mother Earth. This is a small gesture on our part.”
Joseph Xavier
அய்டியாஸ் மையம் 1984-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பசுமையான சூழலை உருவாக்க அய்டியாஸ் மைய நிறுவனர்கள் 45 தென்னை மரங்களை வளாகம் முழுவதிலும் நட்டனர். அது தற்போது வரை நிழல் தந்து, தூசியிலிருந்து பாதுகாத்து, பசுமையான சூழலை அளிப்பது மட்டுமல்லாமல், தென்னை மரங்களிலிருந்து சுவையான தேங்காயும் கிடைக்கிறது. மரங்களில் ஏறி காய்களை வெட்டுவதற்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், கீழே விழும் தேங்காய்களை எங்கள் பணியாளர்கள் தினமும் சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரிக்கப்படும் தேங்காய்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சமையல் செய்வதற்கு தேங்காய் மட்டைகள் விறகாக பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் காய்ந்த தேங்காய்கள் தேங்காய் எண்ணெய் தயாரிக்க அனுப்பப்படுகின்றன. தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அய்டியாஸ் தேங்காய்கள் எங்கள் பல்வேறு பயிற்சி பட்டறைகளில் ஒரு பகுதியாக இருந்து பங்கேற்பாளர்களுக்கு ஊக்கத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
இந்த மரங்கள் பழுதாகி வருவதால், புதிதாக தென்னை மரங்கள் நட முடிவு செய்யப்பட்டது. 38 சாதாரண நாட்டு ரகங்கள், 10 அதிக மகசூல் தரும் ரகங்கள் மொத்தம் 48 தென்னை மரங்கள் பழைய மரங்களை ஒட்டியே சமீபத்தில் நடப்பட்டன. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய மரங்கள் காய்க்கத் தொடங்கும்போது பழைய மரங்களை வெட்டி விறகாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து தென்னங்கீற்றுகள் பசுமையான சூழல் தந்து, காற்று மாசுப்பாட்டிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
எங்களுடைய உடன் பணியாளர்களில் ஒருவரான திரு. கெபி, “80-களில் நடப்பட்ட தென்னையின் பலனை நாங்கள் அனுபவித்தோம். இப்போது, நாங்கள் புதிய மரங்களை வைத்திருக்கிறோம். அதன் பலனை அனுபவிக்க நான் அய்டியாஸில் இருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இதன் பலனை பெறுபவர்கள் எங்களை நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்று நம்புகிறேன். மேலும் பசுமையான சூழலை கொண்ட அய்டியாஸ் மையத்தையே நான் விரும்புகிறேன். நாம் அனைவரும் அன்னை பூமியை பாரமரிக்கும் கடமையை பெற்றிருக்கிறோம். அந்த கடமையை நிறைவேற்றுவதில் இது எங்களுடைய ஒரு சிறிய பங்காகும்” என்று கூறினார்.
– ஜோசப் சேவியர்
Comments are closed.