I am R. Mani. I worked as a sanitation worker for the last 30 years in Melakkal Panchayat, Vadipatti Union, Madurai district. In October 2025, I retired from my job.
After retirement, I went to the Panchayat Secretary to ask about my retirement benefits. He did not speak to me properly and refused to give any answer. Then I went to the Block Development Officer, and he also did not respond. I was helpless.
At that time, I remembered attending a meeting conducted by the Madurai Legal Awareness Coordination Committee (MLACC). In that meeting, the resource person clearly explained our wages and benefits and what must be done if such benefits were denied. Quoting a Government Order, the resource person said that a sanitation worker is entitled to receive Rs. 50,000 as a retirement benefit and Rs. 2,000 as a monthly pension after retirement. I was given a copy of the Government Order.
The person further explained that if we submit a petition to the District Collector’s office on a Monday, grievance day, immediate action would be taken. I searched for a copy of the order. With the help of my grandson, I found the Government Order. I was overjoyed. I wrote a petition, attached all the required documents, and submitted it to the District Collector.
Within one month, the District Collector ordered the concerned officer and clerk to release my retirement amount of Rs. 50,000 and monthly pension of Rs. 2,000.
Within 10 days, I received the Rs. 50,000. I was also given Rs. 4,000 as a pension for two months. They assured me that I would receive my pension every month regularly.
At an old age, when I was worried about how I would manage my expenses, this monthly pension of Rs. 2,000 has become a great support for me. I sincerely thank the MLACC, who guided me and helped me receive my rightful retirement benefits.
– R. Mani, Sanitation Worker, Vadipatti
நான் ஆர். மணி. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் பஞ்சாயத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். அக்டோபர் 2025 இல், நான் என் வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன்.
ஓய்வுக்குப் பிறகு, எனது ஓய்வூதியப் பலன்கள் குறித்து கேட்க பஞ்சாயத்து செயலாளரிடம் சென்றேன். அவர் எனக்கு சரியான பதில் அளிக்க மறுத்துவிட்டார். பின்னர் நான் BDO-விடம் சென்றேன், அவரும் பதிலளிக்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன்.
அப்போது, மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழு (MLACC) நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டது என் நினைவிற்கு வந்தது. அந்தக் கூட்டத்தில், பயிற்சியாளர் தூய்மை பணியாளர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் மற்றும் அத்தகைய சலுகைகள் மறுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி கூறியிருந்தார். மேலும் அரசு உத்தரவை மேற்கோள் காட்டி, துப்புரவுப் பணியாளர் ஓய்வூதியப் பலன்களாக ரூ. 50,000 மற்றும் ஓய்வுக்குப் பிறகு மாத ஓய்வூதியமாக ரூ. 2,000 பெற உரிமை உண்டு என்றும் கூறினார். அரசு உத்தரவின் நகலும் எனக்கு வழங்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் கூறினார்கள். நான் அவர்கள் கொடுத்த அரசாணையின் உத்தரவு நகலைத் தேடினேன். என் பேரனின் உதவியுடன், அரசாங்க உத்தரவின் நகலை கண்டெடுத்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் ஒரு மனுவை எழுதி, தேவையான அனைத்து ஆவணங்களையும் அத்துடன் இணைத்து, மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தேன்.
ஒரு மாதத்திற்குள், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் எழுத்தருக்கு எனது ஓய்வூதியத் தொகையான ரூ.50,000 மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,000 ஆகியவற்றை விடுவிக்க உத்தரவிட்டார்.
10 நாட்களுக்குள், எனக்கு ரூ.50,000 கிடைத்தது. இரண்டு மாதங்களுக்கு ஓய்வூதியமாக ரூ.4,000-மும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் எனது ஓய்வூதியத்தை தவறாமல் கொடுப்பதாக அவர்கள் எனக்கு உறுதியளித்தனர்.
வயதான காலத்தில், எனது செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று நான் கவலைப்பட்டபோது, இந்த மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2,000 எனக்கு ஒரு பெரிய பலமாக மாறியுள்ளது. எனக்கு வழிகாட்டி, எனது நியாயமான ஓய்வூதியப் பலன்களைப் பெற உதவிய MLACC-க்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
– ஆர். மணி, தூய்மைப் பணியாளர், வாடிப்பட்டி

Comments are closed.