I got an opportunity to participate in a 5-day Media Education workshop organized by IDEAS. I liked the way the course was organized. Time management and participation of all through group work and activities were amazing. I was helped to become aware that I have been roped into the media world unconsciously. Now I know media influences me, positively and very often negatively. I also understood how media determines and controls our understanding of the present and future concerns and challenges. Media has coloured my perceptions, analysis and decisions. This realization has helped me to develop myself as a responsible person and critical knowledge to handle media. I will use my learning to guide the future generation, especially the youth. I feel that I have acquired the necessary skills to be a media trainer.
Mr. Vijayan, Salem
I am a transgender and am studying Postgraduation in Social Work at Madurai Kamaraj University. I began my relationship with IDEAS by participating in a Social Advocacy workshop. Realizing the worth of the workshop I participated in Social Analysis and Public Speaking. Recently, I participated in the Media Education workshop. I was deeply impressed by the course content. The workshop helped me to look at the impact of media with critical a mind. I was also made aware of how the media would be a major determining factor in all aspects of our lives in 2030. I know that I can’t run away from the media. I need to educate myself and others. I will use what I have learned from IDEAS in my fieldwork.
Jona, Madurai
அய்டியாஸ் ஏற்பாடு செய்திருந்த 5 நாள் ஊடகக் கல்வி பயிலரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பயிற்சியை ஏற்பாடு செய்திருந்த விதம் எனக்கு பிடித்திருந்தது. நேர மேலாண்மை மற்றும் குழுவாக இணைந்து அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்றது சிறப்பாக இருந்தது. என்னை அறியாமலேயே ஊடக உலகில் எவ்வாறு கட்டுண்டு கிடக்கின்றேன் என்பதை உணர முடிந்தது. ஊடகங்கள்; நேர்மறையாகவும், அதிகமான நேரங்களில் எதிர்மறையாக செல்வாக்கு பெற்றிருக்கிறது என்பது இப்போது எனக்கு புரிந்தது. நிகழ்கால மற்றும் எதிர்கால சிக்கல்கள் மற்றும் சவால்களில் ஊடகங்கள் எவ்வாறு என்னை கட்டுப்படுத்துகிறது என்பதையும் தெரிந்து கொண்டேன். இந்த ஊடகப் பயிற்சியானது ஊடகத்தை பகுப்பாய்வு செய்து முடிவுகள் எடுப்பதற்கான தெளிவை தந்துள்ளது. இதுபோன்ற தெளிவுகள் ஒரு சமூக பொறுப்புள்ள நபராக மாறுவதற்கும், ஊடகங்களைக் கையாளுவதற்கான விமர்சன அறிவை வளர்த்துக் கொள்ளவும் எனக்கு உதவியுள்ளது. நான் கற்றுக்கொண்ட இந்த ஊடகக்கல்வியை எதிர்கால தலைமுறையினரை, குறிப்பாக இளைஞர்களை வழிநடத்த பயன்படுத்துவேன். ஒரு ஊடகப் பயிற்சியாளராக இருப்பதற்குத் தேவையான அறிவை இப்பயிற்சியின் மூலம் பெற்றிருப்பதாக உணர்கிறேன்.
திரு. விஜயன், சேலம்
நான் ஒரு திருநங்கை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறேன். அய்டியாஸ் உடனான எனது உறவு “வழக்காடுதல் (advocacy) பயிற்சியில் பங்கேற்றதன் மூலம் தொடங்கியது. அய்டியாஸ் மையத்தின் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த நான், தொடர்ந்து சமூகப் பகுப்பாய்வு மற்றும் மேடை பேச்சாற்றல் பயிற்சி போன்றவற்றில் பங்கேற்றேன். தற்போது நடந்த ஊடகக்கல்வி பயிலரங்கத்திலும் பங்கேற்றேன். பயிற்சியின் உள்ளடகத்தால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விமர்சன பார்வையோடு பார்க்க இந்தப் பயிற்சி பாசறை எனக்கு கற்றுக் கொடுத்தது. 2030-ஆம் ஆண்டில் ஊடகங்கள் எவ்வாறு நம் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். ஊடகத்தை ஒதுக்கிவைத்து விட்டு வாழ முடியாது என்பதையும் தெரிந்து கொண்டேன். ஊடகக்கல்வி எனக்கும், என்னைப் போன்றோருக்கும் தேவை என்பதை உணர்ந்தேன். அய்டியாஸ் மையத்தில் நான் கற்றுக் கொண்ட கல்வியை எனது களப்பணியில் பயன்படுத்துவேன்.
– ஜோனா, மதுரை
Comments are closed.