My name is Kavitha. I got married to Sankar Ganesh 13 years ago. We have two children and live at Chattirapatti village, Viruthunagar district. I am also the leader of my Dalit Women Federation (DWF) village unit. For the past 6 months, my periods have not been regular. I was suffering from Leukorrhea. I felt ashamed to share my problem with others.
DWF used to organise various training sessions for village units once in 3 months. In March 2025, there was a training at Mettamalai. The theme was on psychosocial and health care. Mrs. Renga Jothi, the health worker from the Primary Health Centre, was the resource person. She spoke on increasing problems of women, especially related to the Uterus, and breast cancer. She also spoke on how psychosocial issues affect the health system.
At the end, she gave time for questions and answers. I did not feel like sharing my problems. Jothi told us that if someone has concerns, the person could approach her in private. I met her and explained to her my problems. She gave a letter to me and asked me to meet with the doctor working at Chattirapatti, Primary Health Centre. I received the letter. But did not go. I prefer to suffer rather than meet another doctor and share my problems.
During this time, Mrs. Packiam, the field staff of DWF, came to our village. I told her that I was hesitant to go and meet the doctor. She consoled me and guided me. The following day, I went to the Primary Health Centres along with my friend. The doctors examined me thoroughly and said that I have a hormone deficiency and I need not worry much. The doctor gave me medicines for 3 months. After this treatment, I am normal now and my periods are regular. I thank Packiam and DWF for giving me the courage and guidance to address my health issues.
S. Kavitha, Head of DWF, Chattirapatti Unit
என் பெயர் கவிதா. நான் 13 வருடங்களுக்கு முன்பு சங்கர் கணேஷ் என்பவரை மணந்தேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் தலித் பெண்கள் கூட்டமைப்பு (DWF) சத்திரப்பட்டி கிராம கிளையின் தலைவராகவும் இருக்கிறேன். கடந்த 6 மாதங்களாக, எனக்கு மாதவிடாய் சீராக இல்லை. வெள்ளைப்படுதலும் அதிகமாக இருந்தது. எனது இந்த பிரச்சனையை மற்றவர்களிடம் சொல்ல எனக்கு கூச்சமாக இருந்தது.
தலித் பெண்கள் கூட்டமைப்பானது 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராம கிளைகளிலும் பல்வேறு பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. கடந்த மார்ச் 2025-இல் மொட்டமலையில் இதுபோன்ற ஒரு பயிற்சி அமர்வு இருந்தது. இதன் கருப்பொருள் பெண்களுக்கான உளவியல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பற்றியது. இந்த அமர்வுக்கு ஆரம்ப சுகாதார மையத்தின் சுகாதாரப் பணியாளர் திருமதி ரெங்கா ஜோதி பயிற்சியாளராக வந்திருந்தார். இந்த அமர்வில் பெண்களிடம் அதிகரித்து வரும் பிரச்சினைகள், குறிப்பாக கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து அவர் பேசினார். உளவியல் பிரச்சனைகள் உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
இறுதியில் கேள்வி பதில்களுக்கான நேரம் கொடுத்தார். எனது பிரச்சினைகளை பொதுவில் கேட்க எனக்கு விருப்பமில்லை. யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால், தன்னை தனிப்பட்ட முறையில் அணுகலாம் என்று ஜோதி அவர்கள் கூறினார். நான் அவரைச் சந்தித்து என் பிரச்சனைகளை விளக்கினேன். அவர் எனக்கு ஒரு பரிந்துரை கடிதம் கொடுத்து, சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவரைச் சந்திக்கச் சொன்னார். பரிந்துரை கடிதம் என்னிடம் இருந்தும், என் பிரச்சனையை வேறொரு மருத்துவரைச் சந்தித்து சொல்வது மிகவும் கஷ்டமாக இருந்தது.
இந்த நேரத்தில், தலித் பெண்கள் கூட்டமைப்பின் கள பணியாளர் திருமதி பாக்கியம் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்தார். எனக்கு மருத்துவரைச் சந்திக்க தயக்கமாக இருப்பதை பற்றி அவரிடம் கூறினேன். அவர் எனக்கு ஆறுதல் கூறி வழிகாட்டினார். மறுநாள், நானும் எனது தோழியுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரை சந்தித்தேன். மருத்துவர்கள் என்னை முழுமையாகப் பரிசோதித்து, எனக்கு ஹார்மோன் குறைபாடு இருப்பதாகவும், கவலைப்படத் தேவையில்லை என்றும் சொன்னார்கள். மருத்துவர்கள் எனக்கு 3 மாதங்களுக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். இந்த சிகிச்சைக்குப் பிறகு நான் இப்போது நன்றாக இருக்கிறேன். என் மாதவிடாய் சீராக உள்ளது. எனது உடல்நலப் பிரச்சனைகளைச் சமாளிக்க எனக்கு மன தைரியத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கிய பாக்கியம் மற்றும் தலித் பெண்கள் கூட்டமைப்புக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
– கவிதா, தலைவி, சத்திரப்பட்டி

Comments are closed.