I am Thayammal. For the past 13 years, I have been working as a manual scavenger in Bommakottai village, Viruthunagar District. I used to do all sorts of menial work given to me. I became a member of Manual Scavengers Rights Sangam and used to attend various training sessions. The Sangam leaders guided me and helped me to understand the rights of workers.
In one of the sessions, the leaders spoke about alternative livelihood options. For the first time, I heard about the welfare loan provided by the THADCO. I asked the leaders to help me to access the loan. With their guidance, I applied for the loan and submitted the necessary documents. THADCO sanctioned me Rs 1,65,000 as a loan for rearing goats. I bought 10 goats. I am repaying the loan regularly and earning a reasonable income. Earlier, when I was doing only manual scavenging, people did not respect me. They used to call me with derogatory words. Now that I am rearing goats, people are respecting me. I am elected as Vice-Secretary of the Sangam, Viruthunagar District. I have grown in self-confidence. I can guide other women. I thank the Madurai Legal Awareness Coordination Committee and Manual Scavengers Rights Sangam.
நான் தாயம்மாள். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், பொம்மகோட்டை கிராமத்தில் 13 வருடங்களாக துப்புரவு பணி செய்து கொண்டிருக்கிறேன். பல இழிவான வேலைகளை எல்லாம் செய்ய சொல்வார்கள். துப்புரவு வேலைக்கு வந்துவிட்டபின் எல்லா வேலைகளை செய்யத்தானே வேண்டும் என்று அனைத்து வேலைகளையும் செய்வேன்.
அவ்வாறு துப்பரவுப் பணி செய்து கொண்டிருக்கும்போது துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்க கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த கூட்டத்தில், நாம் பணி செய்யும் போது தைரியமாக நமது உரிமைகளை கேட்க வேண்டும் என்று கூறினார்கள். நமது உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை போன்ற பல கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.
அவ்வாறு ஒரு அமர்வில் பணியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசு தரும் தாட்கோ கடன் பற்றி எடுத்துக் கூறினார்கள். நானும் ஆடு வாங்குவதற்கு லோன் பெற்றுத் தருமாறு கேட்டேன். என்னிடமிருந்து அதற்கான ஆவணங்களை பெற்றுக் கொண்டு தாட்கோ மூலம் ரூ.1,65,000 கடன் பெற்று தந்தார்கள். அந்த தொகையை வைத்து 10 ஆடுகள் வாங்கி இப்போது வளர்த்து வருகிறேன். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில இன்று எனது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது. கடன் தொகையையும் திரும்ப செலுத்திக் கொண்டிருக்கிறேன்.
நான் துப்புரவு பணி மட்டும் செய்து கொண்டிருக்கும்போது எனது ஊரில் எனக்கு எந்த மரியாதையும் தரமாட்டார்கள். இவள் மலம் அள்ளுகிறவள் என்று தரக்குறைவாக பேசுவார்கள். ஏளனமாக பேசியவர்கள் இப்போது சொந்தமாக தொழில் செய்யும்போது மதிக்கிறார்கள். இப்போது நான் துப்புரவு பணியாளர்கள் உரிமைச் சங்கத்தில் விருதுநகர் மாவட்ட துணை செயலாளராக இருந்து வருகிறேன்.
என் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு மற்றும் துப்புரவு பணியாளர்கள் உரிமைச் சங்கத்திற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Comments are closed.