Mr. Surya, a post-graduate student of Social Work shared his thoughts on how the Public Speaking workshop organized by IDEAS from 23-27 August 2024 made an impact on him. “The workshop attracted 45 young people. As I am a post-graduate in Social Work, I was interested in knowing the kind of work the trainees are doing. It was interesting to note that most of the trainees came from a social work background, generally working in villages. I could mingle with all and make new friends.
The training helped me on how to prepare and take notes before delivering a speech. The trainers made us aware of the importance of body language and gestures, information sharing and engaging the audience. The sessions were practical. For example, we were asked to choose a theme in 1 minute and prepare and deliver a speech for a minute. It looked funny but was useful. Such exercises helped me to be agile and focused. I was also instructed on how to read a book and the importance of reading to become a good public speaker. On the last day, when I delivered a speech in front of my college teacher I was in high spirits.”
Mr. Musthagith, a student participant stated: “Though there were opportunities to speak in public in my college, I did not do it as I felt shy. This workshop gave me self-confidence. I am not worried about making mistakes. I will seize all opportunities and become a good public speaker”. Ms. Stephi Albert working with the Youth Commission of Tamil Nadu affirmed, “I got back into reading habit. Now I can quickly read a book and grasp it. My anxiety and hesitation to speak in public disappeared. I am a confident person now”. Mr. Sabapathi, Director of the National Law Foundation said, “As a director of a foundation I am used to speaking on the stage. Generally, I do not prepare. I speak ad hoc. After participating in this workshop, I realized the importance of preparing my speech. I could see for myself the impact of my speech on the audience after good preparation. I also realized the importance of reading books and updating my knowledge. I am confident that henceforth my speech will be liked by many”.
Compiled by
Muniyandi
அய்டியாஸ் மையத்தில் 2024 ஆகஸ்ட் 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற மேடை பேச்சாற்றல் பயிற்சியில் பங்கேற்ற சமூகப்பணி பயிலும் மாணவர் திரு. சூர்யா தனது அனுபவத்தை கூறும்போது, “இந்த பயிற்சியில் 45 இளையோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். நான் சமூகப்பணி பயிலும் மாணவனாக இருப்பதால் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் எவ்வகையான பணிகளை செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருந்தேன். பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் சமூகப்பணியாளர்களாக, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பணி செய்பவர்களாக இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய நட்பு வட்டாரத்தை உருவாக்குவதற்கு இப்பயிற்சி வாய்ப்பாக அமைந்தது.
இப்பயிற்சியில் பங்கேற்றதன் விளைவாக மேடையில் பேசுவதற்கு முன் எவ்வாறு தயாரிப்பு செய்வது, குறிப்புகள் எடுப்பது போன்றவற்றை கற்றுக் கொண்டேன். உடல்மொழி, சைகைகள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தல் மற்றும் பார்வையாளர்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை கொண்டு போய் சேர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப்பயிற்சி உணர்த்தியது. ஒவ்வொரு அமர்வும் செய்முறை செயல்பாடாகவே இருந்தது. உதாரணமாக, ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து 1 நிமிடத்தில் அதற்கான தயாரிப்பு செய்து 1 நிமிடத்தில் பேச வேண்டும். இது வேடிக்கையாக இருந்தாலும் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. இம்மாதிரியான செயல்பாடுகள் சுறுசுறுப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் பயிற்சியில் பங்கேற்க உதவியாக இருந்தது. ஒரு நல்ல மேடை பேச்சாற்றலுக்கு புத்தகம் வாசிப்பது எவ்வளவு முக்கியம் என்பது அறிவுறுத்தப்பட்டது. பயிற்சியின் 5-வது நாள் எனது கல்லூரி ஆசிரியரின் முன்னிலையில் நான் மேடை ஏறி பேசியது மிகுந்த உற்சாகத்தை எனக்கு தந்தது” என்று கூறினார்.
திரு முசிந்த் கூறும்போது, “கல்லூரி பொது நிகழ்வுகளில் பேசுவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் தயக்கம், கூச்சம் இருந்ததால் நான் பேசியதில்லை. இந்தப் பயிற்சி எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. தவறாக பேசி விடுவோமோ என்ற பயத்தை போக்கியது. இனிமேல் பேசுவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி நல்ல பேச்சாளராக உருவாவேன்” என்று கூறினார்.
தமிழக இளைஞர் பணிக்குழுவின் பணியாளர் ஸ்டெபி ஆல்பர்ட் கூறும்போது, “புத்தகம் வாசிக்கும் பழக்கம் வந்துள்ளது. இப்போது ஒரு புத்தகத்தை விரைவாகவும் ஆழமாகவும் படித்து புரிந்து கொள்ள என்னால் முடிகிறது. பொதுவெளியில் பேச இருந்த தயக்கம் உடைந்து தைரியம் பிறந்துள்ளது. ஒரு தன்னம்பிக்கையுள்ள நபராக மாறியுள்ளேன்” என்று கூறினார்.
நேஷனல் லா பவுன்டேசன் இயக்குநர் சபாபதி தனது அனுவபத்தை பகிர்ந்து கொள்ளும்போது, “ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பதால் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். பொதுவாக மேடையில் பேசுவதற்கு முன் எந்த தயாரிப்பும் இதுவரையில் நான் செய்ததில்லை. இந்த பயிற்சியில் பங்கேற்றதன் விளைவாக பொதுவெளியில் பேசுவதற்கு முன்தயாரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிந்தது. முறையான தயாரிப்புடன் பேசும்போது பார்வையாளர்களிடம் ஏற்படும் தாக்கத்தையும் என்னால் உணர முடிந்தது. புத்தகம் வாசிப்பின் மூலம் அறிவை வளர்த்து கொள்ளும் கலையையும் கற்றுக் கொண்டேன். இனிமேல் என் பேச்சு பலருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது” என்று கூறினார்.
Comments are closed.