CALL US NOW 0452-2337968
January 1, 1970 at 12:00 am

I am blessed to help my colleagues

I am Selvakani, aged 48. I studied up to Class 5. My husband passed away some years ago. I have two children. I live in Mangalam village, Sivakasi Taluk, Virudhunagar District. I belong to the Pallar community, one of the Scheduled Castes. I have been working as a manual scavenger for 10 years in Mangalam Panchayat.

IDEAS organizes various training programmes periodically, such as leadership skills, entitlements of manual scavengers, writing petitions to access government schemes etc. for the members of the Sangam. I regularly attend the programmes. I learned how to write a petition problem-solving technique and about Government welfare schemes.

In one of the programmes, we were informed of the goat-rearing scheme offered by Tamil Nadu Adi Dravidar Housing & Development Corporation Ltd (TAHDCO). Initially, we were hesitating to take the loan. After discussing the matter among the members, 7 of us decided to apply for a goat-rearing loan. The TAHDCO approved our application, but the authorized bank refused to grant the loan amount. We did not give up. With the support of the Madurai Legal Awareness Coordinating Committee, we prepared a petition and submitted it to Virudhunagar District Collector. The Collector ordered the release of the loan. Each one of us received Rs. 1,60,000 out of which Rs. 45,000 was a subsidy. All of us bought goats and rearing. We are earning additional income now. Our family members are happy.

This successful venture helped me to grow in my self-confidence. Now I am working as a leader of the Virudhunagar District of Tamilnadu Manual Scavenger’s Rights Federation. My colleagues who are facing non-payment of salary come to me for assistance. By talking to the officials, I help my colleagues to get their due payments. Seeing my good work, more manual scavengers have joined our federation. I feel that I am blessed to help my colleagues.

Mrs. Selvakani, Manual Scavenger

நான் செல்வக்கனி (வயது 48), 5-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் மங்களம் கிராமத்தில் எனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். சில வருடங்களுக்கு முன்னர் எனது கணவர் இறந்துவிட்டார். நான் பட்டியலின பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவள். கடந்த 10 ஆண்டுகளாக மங்களம் கிராமத்தில் தூய்மைப் பணியாளராக பணி செய்து வருகிறேன்.
துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தலைமைத்துவம், தூய்மை பணியாளர்களின் உரிமைகள், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான மனு எவ்வாறு எழுதுவது போன்ற பல பயிற்சிகளை அய்டியாஸ் மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது. நான் தொடர்ந்து இதுபோன்ற பயிற்சிகளில் பங்கேற்றுள்ளேன். அதன் விளைவாக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றி தெரிந்து கொண்டேன்.
அவ்வாறு நடைபெற்ற பயிற்சியில் தாட்கோ மூலம் கடன் உதவி பெற்று ஆடு வளர்ப்பது பற்றி கூறினார்கள். ஆரம்பத்தில் கடன் வாங்க தயக்கமாக இருந்தது. பிறகு சங்க உறுப்பினர்களிடம் கலந்து பேசிய பின், 6 பேர் ஆடு வளர்ப்பதற்கான கடன் வாங்க முடிவு செய்து விண்ணப்பித்தோம். தாட்கோ அலுவலகம் எங்கள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கி நிர்வாகம் எங்களுக்கு கடன் தொகையை வழங்க மறுத்துவிட்டது. ஆனால் முயற்சியை நாங்கள் கைவிடவில்லை. மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழுவின் உதவியுடன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தோம். மாவட்ட ஆட்சியர் கடன் தொகையை கொடுக்க ஆணையிட்டார். ஒவ்வொருவருக்கும் ரூ. 45,000 மானித்துடன் ரூ. 1,60,000 கடன் தொகை கிடைத்தது. 7 பேரும் கடன் தொகையை வைத்து ஆடு வாங்கி வளர்த்தோம். இதன்மூலம் போதுமான வருமானம் கிடைக்கிறது. தற்போது குடும்பத்தாருடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறோம்.
இந்த முயற்சியில் கிடைத்த வெற்றி, தன்னம்பிக்கையில் நான் வளர பெரிதும் உதவியாக இருந்தது. தற்போது நான் துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவியாக இருக்கிறேன். என்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் சம்பளம், நிலுவைத் தொகை போன்ற பல காரணங்களுக்காக என்னிடம் வருகிறார்கள். நான் அரசு அதிகாரிகளிடம் அவர்களின் சார்பாக பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட உதவியாக இருக்கிறேன். நான் செய்யும் இந்த பணியை பார்த்து இன்னும் பல தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தில் ஆர்வமுடன் இணைந்திருக்கிறார்கள். எனது சக பணியாளர்களுக்கு உதவுவது எனக்கு மனநிறைவை தந்திருக்கிறது.
– திருமதி செல்வகனி, தூய்மைப் பணியாளர்
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam