CALL US NOW 0452-2337968
January 1, 1970 at 12:00 am

My long dream is fulfilled now!

I am Satya, working as a Library and Documentation staff at IDEAS since 2003. Only after joining the institute, I travelled by train. To participate in the World Social Forums, organized by the Jesuits, I travelled to Mumbai, and Delhi from Madurai, spending long hours on the train, singing and joking with my colleagues. These were memorable experiences. When the institute organized annual outings to tourist places, I visited Kerala, Kanyakumari, Ooty, Coutralam, Mysore and Kollimali. Every trip was a joyful and learning experience.
Last year, when my first son was studying in Tirunelveli, I used to travel by train to see him. Trains used to be crowded.  But as the fare was cheaper than the bus, I preferred to travel by train. Sometimes I used to stand for 3 hours and travel.
From my childhood, I wished to go to an airport and see how an aircraft fly.  It was a dream for many years. A few years ago, I, along with my two kids, went to Madurai airport, stood outside the boundary wall and saw from a distance how flights land and take off. From afar, nothing was clear, and everything looked small, including people. Still, it was a good experience.
In March 2024, when it was announced in the institute that this year the staff would be taken to Goa for a tour and part of the travel would be by aeroplane, I was thrilled. When the time for travel to Goa was nearing, I was a bit disturbed. I have two school-going boys. Every day I used to get up at 5 am, prepare breakfast and lunch boxes and send my children to school at 7.30 am. Who will do these, if I go to Goa? I spoke to the Superior of the IDEAS Jesuit community. He encouraged me to go to Goa and leave my boys at IDEAS. He agreed to take care of their needs. This was a big relief for me.
I was astonished to see the T2 terminal of Bangalore airport. It was a beautiful and well-designed. Everything looked glorious. Every step of mine in the airport was a thrilling experience. When I entered the aircraft and took my seat, I told myself, ‘Oh god, finally I am in a plane now’. In Goa, I had the opportunity to visit the Basilica where St. Francis Xavier’s body is kept. I prayed for my family and many of my friends.
All three days I was relaxed, as I had no worries about cooking, taking care of my sons, and going to office. I enjoyed every bit of the tour. I was also happy to be with my colleagues who work in office and the support staff. Thank God, I did not miss this opportunity. My long-time dream is fulfilled.

Mrs. Satya, IDEAS, Madurai

நான் சத்யா. அய்டியாஸ் மையத்தில் 2003-ஆம் ஆண்டு முதல் நூலகப் பணியாளராக பணி செய்து வருகிறேன். பணியில் சேர்ந்த சில ஆண்டுகளில் மதுரை சேசுசபை சமூகப்பணி குழு ஒருங்கிணைத்த உலக சமூக மாமன்றத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மும்பை, டெல்லி போன்ற இடங்களுக்க மிக நீண்ட இரயில் பயணமாக அமைந்தது. உடன்பணியாளர்களுடன் இணைந்து சென்றது சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும்; மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது.
அய்டியாஸ் மையத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களை சுற்றுலா அழைத்து செல்வார்கள். அவ்வாறு தான் கேரளா, கன்னியாகுமரி, ஊட்டி, குற்றாலம், மைசூர். கொல்லிமலை போன்ற சுற்றுலா தளங்களை கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு பயணமும் மகிச்சியையும், நல்ல அனுபவத்தையும் கற்றுக் கொடுத்தது.
சென்ற வருடம் எனது மூத்த மகன் திருநெல்வேலியில் படித்து கொண்டிருந்தான். அவனை பார்க்க செல்லும் நேரங்களிளெல்லாம் நான் இரயிலில் தான் பயணம் செய்வேன். இரயில் பயணம் செல்லும்போது கூட்டமாகவும், சில நாட்களில் 3 மணி நேரம் நின்று கொண்டே எல்லாம் பயணம் செய்திருக்கிறேன். இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் ஏன் இரயில் பயணம் செய்தேன் என்றால், பேருந்து கட்டணத்தை விட இரயில் கட்டணம் மிக குறைவாக இருந்தேயாகும்.
எனது சிறுவயதிலிருந்தே விமானநிலையத்திற்கு சென்று விமானத்தை பார்க்க வேண்டும் என்பது பல ஆண்டுகால ஆசையாக (கனவாக) இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் தான் எனது இரண்டு மகன்களுடன் மதுரை விமானநிலையத்தை பின்புற சுவர் அமைந்திருக்கும் சாலையோரம் நின்று விமானம் ஏறுவது, இறங்குவது போன்றவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் தூரத்திலிருந்து தெளிவாக கூட பார்க்க முடியாமல் இருந்தது. இருந்தாலும் அவ்வாறு பார்த்ததும் நல்ல அனுபவமாக தான் இருந்தது.
இந்த வருடம் 2024 மார்ச் மாதம் அய்டியாஸ் மையத்திலிருந்து சுற்றுலாவிற்கு கோவாவிற்கு செல்வதாகவும், அதுவும் விமானத்தில் பயணம் செய்யப்போவதாகவும் தந்தையர்கள் கூறினார்கள். இந்த அறிவிப்பு எனக்கு ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தது. கோவா பயணம் செல்ல வேண்டிய நாட்கள் நெருங்கி வந்த நேரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏனென்றால் இந்த பயணம் 4 நாட்கள் செல்ல வேண்டியிருக்கிறது. எனது இரண்டு மகன்களும் பள்ளிக்கு செல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு எழுந்து காலை, மதிய உணவு தயார் செய்து 7.30 மணிக்கெல்லாம் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த நிலையில் எவ்வாறு கோவாவிற்கு செல்வது என்று கவலையுடன் இருந்தேன். எனது இயலாமையை அய்டியாஸ் மையத்தின் இல்லத்தலைவர் தந்தையரிடம் கூறினேன். நான் கூறியதை கேட்ட தந்தை அவர்கள், “சத்யா, நீ சந்தோசமாக கோவா சென்று வா, நான் உன் பிள்ளைகளை பார்த்து கொள்கிறேன்” என்று கூறினார். அவ்வாறு சொல்லியது மட்டுமல்லாமல் நான் கோவா சென்ற 4 நாட்களும் எனது பிள்ளைகளுக்கு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து நன்றாக பார்த்து கொண்டார்கள். எனது மகன்கள் அய்டியாஸ் மையத்தில் தந்தையின் கண்காணிப்பில் பாதுகாப்புடனும், சந்தோசத்துடன் இருந்ததினால்தான், என்னால் 4 நாட்களும் கோவா சுற்றுலா பயணத்தை சந்தோசமாகவும் மகிச்சியாகவும் அனுபவிக்க முடிந்தது.
கோவா செல்லும் விமானம் ஏறுவதற்கு பெங்களுர் T2 விமானநிலையத்திற்கு சென்றோம். அந்த விமானநிலையம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. விமான நிலையம் முழுவதும் வியப்பூட்டும் வகையில் இருந்தது. விமானநிலையத்திலிருந்த ஒவ்வாரு விநாடியும் ஆச்சரிமூட்டும் வகையில் இருந்தது. பிறகு விமானத்திற்குள் நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தவுடன், “இந்த நேரத்தில் நான் விமானத்தில் அமர்ந்திருக்கிறேன்” என்பது மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு கோவாவில் சவேரியாரின் திருத்தலத்திற்கு சென்றோம். அங்குள்ள சவேரியாரின் அழியா உடலை பார்க்கும் அரிதான வாய்ப்பு கிடைத்தது. அத்திருத்தலத்தில் எனது குடும்பத்திற்காகவும் நண்பர்களுக்காகவும் சவேரியாரிடம் எனது செபத்தை வைத்தேன்.
இந்த பயணத்தில் 4 நாட்களும் எந்த வீட்டு கவலையும், பணி சுமையும், சமைக்கும் வேலையும், மகன்களை கவனித்தும் கொள்ளும் வேலையும் இல்லாமல் ஓய்வாக இருந்தேன். சுற்றுலாவின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். உடன் பணியாளர்கள் மற்றும் தந்தையர்களுடன் இந்த பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். இந்த அரிய வாய்ப்பை எந்த காரணத்திற்காகவும் நான் இழக்கவில்லை. எனது பல ஆண்டுகால கனவு நனவானது. இறைவனுக்கு நன்றி.
– சத்யா 
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam