I am Ms. Bavina, from Koneripatti village, Salem. I got the opportunity to participate in the Social Advocacy and Lobbying workshop organized by IDEAS from 7-12 March 2024. I had worked as an AICUF full-timer, and now I am working with the SC/ST Commission of the Church.
As part of my job, I go for field investigation. However, I was not aware of how to help people in distress. This training gave me good insights into how to address human rights violations, conduct field studies, and helped me to deepen my understanding of the Constitution. The session on the Right to Information (RTI) was highly beneficial. I had almost given up the habit of reading. As part of the training, IDEAS insisted on reading in the morning and sharing the summary in groups. With peer group pressure, I am happy that I am back into the habit of reading.
Mr. Santosh, a student leader said, “This was my first experience to speak in public holding a microphone. My confidence level has increased. I learnt how to file an FIR and to dialogue with the police. I will share my learning with my student community”.
Mr. Muniyandi, Trainer
என் பெயர் பவீனா. நான் சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். 2024 மார்ச், 7-12 – தேதிகளில் அய்டியாஸ் மையம் ஏற்பாடு செய்திருந்த சமூக வழக்காடுதல் பயிற்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அய்க்கஃப் இயக்கத்தில் முழுநேரப் பணியாளராக பணி செய்தேன். தற்போது SC/ST பணிக்குழுவில் பணி செய்கிறேன். எனது பணியின் நிமித்தம் பல இடங்களுக்கு கள ஆய்வுக்கு செல்ல வேண்டியிருக்கும். அவ்வாறு செல்லும் போது அங்குள்ள மக்களின் பிரச்சனைகளில் அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது அதை எவ்வாறு தடுப்பது, அது பற்றி எப்படி கள ஆய்வு செய்வது போன்றவற்றோடு, அரசியல் அமைப்புச் சட்டத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கும் இந்தப்பயிற்சி உதவியாக இருந்தது. தகவலறியும் உரிமை சட்டம் (RTI) பற்றிய அமர்வும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புத்தகம் வாசிக்கும் பழக்கமே இல்லாமல் இருந்தேன். பயிற்சியின் ஒரு பகுதியாக காலையில் புத்தகங்கள் வாசிக்கவும், பிறகு அதைப்பற்றி குழுவில் பகிரவும் பழகச் செய்தார்கள். அதன் பயனாக தற்போது மீண்டும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடங்கியுள்ளேன்.
பயிற்சியில் பங்கேற்ற தோழர் சந்தோஷ், இங்குதான் தான் முதன்முறையாக மைக் பிடித்து பொதுவெளியில் பேசியதாகவும், பயிற்சியின் பயனாக மன உறுதி வளர்ந்துள்ளதாகவும், முதல் தகவலறிக்கை (குஐசு) பதிவு செய்வது, காவல்துறை அதிகாரிகளிடம் எவ்வாறு பேசுவது போன்றவைகளை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். தான் கற்று கொண்டவைகளை மாணவ சமுதாயத்திடம் கொண்டு போய் சேர்க்க ஆர்வமாயிருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments are closed.