CALL US NOW 0452-2337968
January 18, 2024 at 12:00 am

It was an opportunity to recommit myself

I have been working as a Training Coordinator at IDEAS for the past 17 years. Though my responsibility is to organize all major training programs, I especially focus on multi-level capacity-building training sessions for youth and leaders of various movements.

IDEAS organized a 2-day workshop on ‘Dimensions that motivate and sustain social workers in social engagements’ from 22-23 July 2013 for clergy and religious. 55 participants from 13 religious congregations participated. Each one shared their personal stories and challenges faced. I was inspired and motivated.

The sharing by Sr. Lilian was a special moment. She highlighted various strategies that she had followed while working at the grassroots level, especially in motivating, organizing, and empowering women. A few of her experiences were unbelievable. I wondered at her courageous involvement and risk-taking, despite being a religious nun. I could understand how much religious sisters have contributed at the grassroots level in walking with the poor
and empowering them.

The 2-day workshop helped me to recommit myself. I felt that I must also motivate others through my personal sharing of my experiences. I felt how powerful personal narratives have transforming effects.

இன்னும் அதிகமாக என்னை அர்ப்பணிக்க…
நான் கடந்த 17 ஆண்டுகளாக அய்டியாஸ் நிறுவனத்தில் பயிற்சி பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறேன். அய்டியாஸ் மையத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய பயிற்சிகளையும் ஏற்பாடு செய்வது எனது பொறுப்பு என்றாலும், இளைஞர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்களுக்கான பல நிலைகளில் திறன் வளர்ப்பு பயிற்சி அமர்வுகளை நடத்துவதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 22-23 வரை தமிழகத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளுக்கான சமூகப் பணியாளர்களை சமூகப் பணிகளில் ஊக்குவிக்கும் மற்றும் நிலைநிறுத்தும் பரிமாணங்கள் என்ற தலைப்பில் அய்டியாஸ் இரண்டு நாள் கருத்தமர்வை ஏற்பாடு செய்தது. இதில் 13 சபைகளைச் சேர்ந்த 55 அருட் சகோதரிகள் மற்றும் அருட் தந்தையர்கள்; பங்கேற்றனர். ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட சமூக பணிகளில் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களுடைய பகிர்வு எனக்கு ஊக்கமும் உத்வேகமும் தந்தது.
குறிப்பாக சமூக பணிகளில் நீண்ட நாள் அனுபம் பெற்ற சகோ. லிலியனின் அவர்களின் பகிர்வு சிறப்பானதாக அமைந்தது. அடித்தட்டு மக்கள் மத்தியில்; பணிபுரியும்போது, குறிப்பாக பெண்களை ஊக்குவிப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் மற்றும் அதிகாரமளிப்பதிலும் அவர் கையாண்ட பல்வேறு யுக்திகளைப் பகிர்ந்து கொண்டார். அவர்களுடைய சில அனுபவங்கள் பிரம்மிக்கத்தக்க வகையில் அமைந்திருந்ததன. ஒரு கிறித்தவ மத கன்னியாஸ்திரியாக இருந்தபோதிலும், அவர்களுடைய துணிச்சலான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் கேட்டறிந்த போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஏழைகளுடன் இணைந்து, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அடித்தட்டு மக்கள் மத்தியில் அருட் சகோதரிகள் எவ்வளவு பங்களித்துள்ளார்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
இரண்டு நாள் பயிலரங்கம் என்னையே நான் மீண்டும் அர்ப்பணிக்கத் தூண்டுவதாக அமைந்தது. எனது தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்வதின் மூலம் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். தனிப்பட்ட அனுபவங்கள் எவ்வளவு சக்திவாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நான் உணர்ந்தேன்.
திரு. முனியாண்டி
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam