CALL US NOW 0452-2337968
September 14, 2023 at 12:00 am

I will demand maintenance for the well-being of my daughter

“I am Ms. Menaka and completed my Class X in March 2008. I was just 16. I have two younger sisters. As we were three girls, my parents insisted I get married to my uncle at the age of 16. I was not prepared for the marriage, but I could not say no. My uncle at the time of marriage was 39 years old.

I delivered two children. The first was a male child studying in Class X and the second was a girl child, Ms. Armika, studying in Class IV. About 4 years ago, my husband started ill-treating me. I reported the matter to my parents. My parents said, “Once you are married, you need to live with him throughout your life and manage. Ill-treatment of women is not unusual. If you go for divorce, we will not accept you. It will be a shame for the family status and caste prestige. The community will look down upon us”. As I could not bear the torture of my husband, three years ago, I decided to go for a mutual divorce. Now I live separately.

A year ago, my son Vairava Kishore went to my parent’s house. My parents brainwashed him, and my son continues to live with my parents. I am working in a departmental store as a billing person. With this meagre income, I am surviving along with my girl child. My parents also snatched my jewels and were not ready to give them to me as a punishment for going for a divorce. As I went for a mutual divorce, I was thinking that I cannot claim maintenance for my girl child.

I got an opportunity to participate in the 2-day Training of Trainers (ToT) workshop organised by IDEAS. This workshop helped me to realise that I can demand my parents to return my jewels and I can file a case against my husband to pay maintenance for my girl child. This was a great learning and relief. I am determined to do both. Thanks to Adv. Sayeera Banu and Adv. Santhanam who gave me the confidence and guided me to devise my future”, narrated 29-years old Ms. Menaka.

“Usually, the trainees hesitate to speak in public. When I asked them to define domestic violence, the women captured the critical aspects of violence. I was enthused and the resource persons helped the participants on how the women could help other battered women to speak out and report the violence to appropriate authorities to seek remedies”, expressed Adv. Sayeera Banu. IDEAS organised a 2-day workshop on Capacity Building of Women to Respond to Violence against Women from 5-6 August 2023. The sessions were handled by Adv. Sr. Rosey, Adv. Sr. Amala, Adv. Fr. Santhanam, Adv. Meenakshi and Adv. Sayeera Banu. About 22 participants from 9 NGOs participated and benefitted. Out of 22, 3 participants were men.

எனது மகளின் பராமரிப்பு மற்றும் நல்வாழ்விற்காக நான் போராடுவேன்!
என்னுடைய பெயர் மேனகா, மார்ச் 2008 இல் நான் பத்தாம் வகுப்பை முடித்திருந்தேன். எனக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். நாங்கள் மூன்று பெண்களாக இருந்ததால், எனது மாமாவிற்கு என்னுடைய 16 வயதில் என்னை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என் பெற்றோர் வற்புறுத்தினார்கள். திருமணத்திற்கு நான் தயாராக இல்லை, ஆனால் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. திருமணத்தின் போது என் மாமாவுக்கு வயது 39.
எனக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முதலாவதாக ஆண் குழந்தை பத்தாம் வகுப்பு படிக்கிறான். இரண்டாவதாக பெண் குழந்தை தர்மிகா நான்காம் வகுப்பு படிக்கிறாள். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, என்னை என் கணவர்; சித்தரவதை செய்யத் தொடங்கினார். இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். என் பெற்றோரோ, “உனக்கு திருமணமாகிவிட்டால், நீ அவனுடன் தான் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும். பெண்களை கணவர்கள் அடிப்பது சாதாரணமானதுதான், எனவே நீ விவாகரத்து செய்தால், நாங்கள் உண்னை ஏற்றுக்கொள்ள மாட்டோம். குடும்ப அந்தஸ்துக்கும், சாதி கவுரவத்துக்கும் அவமானமாக இந்த சமூதாயம் நம்மை இழிவாகப் பேசும்” என்று கூறினார்கள்.
கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல், மூன்று ஆண்டுகளுக்கு முன், சமரசத் தீர்வு மையத்தின் உதவியுடன் விவாகரத்து பெற முடிவு செய்தேன். இப்போது நான் தனியாக வாழ்கிறேன்.
ஒரு வருடத்திற்கு முன்பு, என்னுடைய மகன் வைரவ கிஷோர் என் பெற்றோர் வீட்டிற்குச் சென்றான். பெற்றோரால் அவன் மூளைச்சலவை செய்யப்பட்டு தற்பொழுது என்னுடைய மகன் தொடர்ந்து என் பெற்றோருடன் இருக்கிறான். நான் ஒரு பல்பொருள் அங்காடியில் பில்லிங் போடும் வேலை செய்கிறேன். இந்த சொற்ப வருமானத்தில் என்னுடைய பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறேன். பெற்றோரும் என்னுடைய நகைகளை பறித்துக்கொண்டனர், நான் சமரச விவாகரத்து செய்ததனால், என் பெண் குழந்தைக்கு நான் ஜீவனாம்சம் வாங்க முடியாது என்று நினைத்தேன்.
அய்டியாஸ் மையம் ஏற்பாடு செய்த 2 நாள் பயிற்சியாளர்களின் பயிற்சி (TOT) பட்டறையில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்தப் பயிற்சியில் எனது நகைகளைத் திருப்பித் தருமாறு என் பெற்றோரிடம் நான் கோர முடியும் என்பதையும், எனது பெண் குழந்தைக்குப் பராமரிப்புச் செலவுக்காக என் கணவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும் என்பதையும் உணர இந்தப் பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வழக்கறிஞர். சயீரா பானு மற்றும் வழக்கறிஞர். மீனாட்சி ஆகியோருக்கு எனது நன்றிகள். எனது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு எனக்கு வழிகாட்டியவர் வழக்கறிஞர். சந்தானம் என்று 29 வயதான திருமதி மேனகா கூறினார்.
பொதுவாக, பயிற்சி பெறுபவர்கள் பொதுவில் பேசத் தயங்குவார்கள். குடும்ப வன்முறையை வரையறுக்க நான் அவர்களிடம் கேட்டபோது, பெண்கள் வன்முறையின் ஒரு சில முக்கியமான அம்சங்களைப் கூறினர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெண்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு கருத்துரையாளகள் எடுத்துக் கூறினார்கள். மேலும் வன்முறையைப் பற்றிப் பேசுவதற்கும், உரிய அதிகாரிகளுக்குப் புகார் அளித்து தீர்வுகளைப் பெறுவதற்கும் வழக்கறிஞர். சயீரா பானு வழிகாட்டினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பதிலிறுப்பு செய்வதற்கும், பெண்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இரண்டு நாள் பயிலரங்கை அய்டியாஸ் மையம் 2023 ஆகஸ்ட் 5-6 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் வழக்கறிஞர்கள். ரோஸி, அமலா, சந்தானம், மீனாட்சி மற்றும் வழக்கறிஞர். சயீரா பானு. ஆகியோர் கருத்துரை வழங்கினர். 9 தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலிருந்து 22 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அதில் 3 பேர் ஆண்கள்
–                  பணி. ஜோசப் சேவியர்
SHARING IS CARING

Sign up for E-Newsletter Muhil Muzhakkam